இயேசுவையும் நபிகளையும் சந்தித்தாரா சித்தர் போகர்? உலகின் முதல் Time Traveler – "ககன குளிகை மர்மம்"

"காலம் என்பது ஒரு மாயை!" – ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூறிய இந்த ஒற்றை வரிக்கு பின்னால் இந்தப் பிரபஞ்சத்தின் மிகப்பெரிய மர்மமே ஒளிந்திருக்கிறது. நாம் நேரத்தைச் சீரான ஒன்றாகக் கருதுகிறோம், ஆனால் நவீன இயற்பியல் காலம் வளைந்து கொடுக்கக்கூடியது என்கிறது. இந்த அறிவியல் ரகசியத்தை, நவீன உலகம் கண்டறிவதற்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஒரு தமிழ் சித்தர் நிரூபித்திருக்கிறார், அவர்தான் சித்தர்களில் சூப்பர் ஸ்டார் ஆன போகர்.
கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே வாழ்ந்ததாகக் கருதப்படும் போகர், தனக்குப் பின்னால் வந்த இயேசு பிரானையும், அவருக்குப் பின் வந்த நபிகள் நாயகத்தையும் நேரில் சந்தித்ததாகத் தனது ‘சப்தகாண்டம்’ நூலில் பதிவு செய்துள்ளார். ஒரு மனிதனால் எப்படி நூற்றாண்டுகளைக் கடந்து பயணிக்க முடிந்தது? இது வெறும் ஆன்மீக அதிசயமா அல்லது மறைக்கப்பட்ட அறிவியலா?

ககன குளிகை: 
அணுக்களின் அதிர்வெண்ணை மாற்றும் வித்தை

போகர் தனது வான்வழிப் பயணங்களுக்குக் கருவியாகப் பயன்படுத்தியது 'ககன குளிகை'. நவீன இயற்பியல் கண்ணோட்டத்தில் பார்த்தால், இது ஒரு மேம்பட்ட உயிரியல் தொழில்நுட்பமாக இருக்கலாமோ?!.
இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துப் பொருட்களும் குறிப்பிட்ட அதிர்வெண்ணில் (Frequency) அதிர்ந்து கொண்டிருக்கின்றன.
போகர் தயாரித்த அந்தக் குளிகை, ஒரு வினையூக்கியாகச் செயல்பட்டு உடலின் அணுக்களின் அதிர்வெண்ணை மாற்றியமைத்திருக்கலாம். அதாவது, ஒரு பருப்பொருளாக இருக்கும் மனித உடல், ஒளியின் அதிர்வெண்ணிற்கு உயர்த்தப்படும்போது, அது ஒரு 'ஆற்றல் துகளாக' (Energy Form) உருமாறுகிறது. இந்த நிலையில் காலமும் வெளியும் (Space and Time) அவருக்கு ஒரு தடையாக இருந்திருக்க வாய்ப்பில்லை. இதுதான் அவரைப் புவிஈர்ப்பு விசைக்கு அப்பாற்பட்டு வான்வழியே பயணிக்கச் செய்த ரகசியமாக இருக்கலாம் என்றே யூகிக்க தோன்றுகிறது.

ஐன்ஸ்டீனின் சார்பியல் தத்துவமும் போகரின் கால நீட்டிப்பும்:
ஐன்ஸ்டீனின் சார்பியல் தத்துவத்தின் (Theory of Relativity) படி, ஒரு பொருள் ஒளியின் வேகத்திற்கு இணையாகப் பயணிக்கும்போது "கால நீட்டிப்பு" (Time Dilation) நிகழும். அதாவது, அதிவேகமாகப் பயணிக்கும் அந்தப் பொருளுக்குக் காலம் மெதுவாக நகரும்.
போகர் தனது ககன குளிகையின் மூலம் ஒளியின் வேகத்திற்கு நிகரான ஒரு வேகத்தைச் சாத்தியப்படுத்தியிருந்தால், அவர் கி.மு.-வில் இருந்து கி.பி.-க்குள் நுழைவது தர்க்க ரீதியாகச் சாத்தியமே. அவர் ஒளியின் வேகத்தில் பயணித்திருந்தால், அவருக்குச் சில மணிநேரங்கள் அல்லது நாட்கள் கழிந்திருக்கும்போதே, பூமியில் சில நூற்றாண்டுகள் கடந்திருக்கக்கூடும். ஐன்ஸ்டீன் 1905-ல் கணித ரீதியாகச் சொன்னதை, போகர் அனுபவ ரீதியாக அன்றே நிகழ்த்திக் காட்டியிருக்கலாம்.

எருசலேம் முதல் மெக்கா வரை: 

போகரின் நேரடிச் சாட்சியம்
போகர் தனது 2226-வது பாடலில், சீனா வழியாக எருசலேம் சென்றதை மிகத் தெளிவாகக் குறிப்பிடுகிறார்:
"கடவுளாமேசுவின்தன் காட்சிகண்டேன்... புகைரதத்தை மாட்டிக்கொண்டு நலமுடனே எருசலேம் காணவந்தேன்"

அவர் இயேசுவையும் அவரது சீடர்களையும் நேரில் கண்டதாகக் கூறுகிறார். தொடர்ந்து, நபிகள் நாயகத்தைத் தேடிச் சென்றபோது நிகழ்ந்த அனுபவத்தில், நபியின் இருப்பு உணரப்பட்டும் உருவம் (ரூபம்) மட்டும் புலப்படவில்லை என்று குறிப்பிடுகிறார். 

இடைச்செருகலா அல்லது அறிவியலுக்கு அப்பாற்பட்ட அதிசயமா?:

சித்தர்களின் அறிவியல் என்பது உடலையும் அணுக்களையும் மாற்றியமைக்கும் 'உயிரியல் தொழில்நுட்பம்'. இயந்திரங்கள் இன்றி, மனத்தையும் உடலையும் ஊர்தியாக மாற்றி அவர் மேற்கொண்ட இந்தப் பயணம், மனித இனம் இன்று எட்டத் துடிக்கும் விண்வெளி மற்றும் காலப்பயண ரகசியங்களின் ஆதித் திறவுகோலாக இருக்கலாம்.
அவர் மேற்கொண்ட பயணங்களுக்கு அவர் வடிவமைத்த வானூர்திகளையும் பயன்படுத்தி உள்ளார் என்பது வேறு விஷயம்.

அதிசய சித்தர் போகர்:
சித்தர் போகர் ஒரு வெறும் ஞானி மட்டுமல்ல; அவர் காலத்தின் விதிகளையே மாற்றி எழுதிய ஒரு மகா விஞ்ஞானி. காலம் என்பது நாம் நினைப்பது போல நிலையானது அல்ல; அதைக் கடப்பதற்கான ரகசியம் நம் அணுக்களுக்குள்ளேயே ஒளிந்திருக்கிறது என்பதை அவர் நிரூபித்திருக்கிறார்.
உங்களுக்கு என்ன தோன்றுகிறது? போகர் ஒரு காலப்பயணியாக இருக்கலாமோ?!

இன்றைய மர்மம் நாளைய‌ அறிவியல் ஆகலாம்.. 
அறிவுக்கு அப்பாற்பட்ட அறிவியலுடன் அடுத்த பதிவில் சந்திப்போம்..!!

⚠️ Disclaimer:
போகர் சப்தகாண்டம் 7000ல் (2216 முதல் 2230 வரை) உள்ள பாடல் குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. சித்தர்களின் பாடல்களில் உள்ள ஆழ்ந்த கருத்துக்களை நவீன அறிவியல் ரீதியாக (Scientific Perspective) அணுகுவதே இதன் நோக்கம். இது எந்த மதத்தையும் முன்னிலைப்படுத்துவதற்கோ, தாழ்த்துவதற்கோ அல்லது புண்படுத்துவதற்கோ இந்த கட்டுரை எழுதப்படவில்லை.
போகர் சப்தகாண்டம் (போகர் 7000) எழுதப்பட்ட காலம் கி.மு 500 முதல் கி.மு 100 வரை இருக்கலாம் என கணிக்கப்படுகிறது, 
ஆனால், அவர் தனது பாடல்களில் இயேசு மற்றும் நபியை அடுத்தடுத்து சந்தித்தது போல் எழுதியுள்ளார். ஆனால், இயேசுவுக்குப் பின் பல நூற்றாண்டுகளுக்கு பின் வந்தவர் நபிகள் நாயகம். ஒன்று போகர் காலப் பயணம் செய்து இருவரையும் பார்த்து இருக்கலாம் அல்லது கிபி 570க்குப் பின்பு போகர் சப்தகாண்டம் எழுதப்பட்டு இருக்கலாமோ?

சித்தர் மரபின் மர்ம உலகத்தையும் போகரின் தனித்துவத்தையும் மையமாகக் கொண்டு,
நவபாஷாண முருகன் சிலை உருவான பின்னணி, அதற்கான மூலிகை தேடல்கள், கலவைகள் என
‘அன்று’ நிகழ்ந்த சம்பவங்களையும் ‘இன்று’ தொடரும் நிகழ்வுகளையும்
விறுவிறுப்பான திருப்பங்களோடு இணைத்து வாசகனை இறுக்கப் பிடிக்கும் புதினம் தான் "இறையுதிர் காடு".
வரலாறும் மர்மமும் கலந்த இந்தப் பயணம், படிக்கப் படிக்க ஆர்வத்தை அதிகரிக்கிறது.

87 வாரங்கள் ஆனந்த விகடனில்
வாசகர்களை கட்டிப்போட்ட 
👇 Book link


கருத்துரையிடுக

0 கருத்துகள்