ரைட் சகோதரர்களுக்கு முன்பே விமானம் கண்டறிந்த தமிழன்!போகர் சப்தகாண்டம் சொல்லும் "ஏரோநாட்டிக்ஸ் அறிவியல்"


விமானம் என்றாலே ரைட் சகோதரர்கள் தான் உலகிற்கு அறிமுகமானவர்கள். ஆனால், அவர்களுக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே வான்வெளியைத் தொட்ட ஒரு மாபெரும் தொழில்நுட்ப மேதை சித்தர் போகர். வான்வழிப் பயணம் குறித்த அவரது கண்டுபிடிப்புகள் வெறும் கற்பனையல்ல, அவை ஆதாரபூர்வமான அறிவியல் உண்மைகள்.

சித்திர ரதம்: தமிழனின் ஆதி வான் ஊர்தி

சித்தர் போகர் தனது வான்வழிப் பயணங்களுக்காக உருவாக்கிய மர்ம ஊர்தியின் பெயர் 'சித்திர ரதம்'. இது இன்றைய நவீன விமானங்களின் ஆரம்பகால வடிவமாகும். இரும்புச் சட்டங்களால் ஆன வலிமையான கட்டமைப்பின் மேல், காற்றை எதிர்கொள்ளும் திறன் கொண்ட பட்டுத் துணிகளைப் போர்த்தி இந்த ஊர்தியை அவர் வடிவமைத்தார். இன்றைய ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் துறையில் 'Frame and Fabric' என்று அழைக்கப்படும் அதே நுட்பத்தை போகர் அன்றே கையாண்டு, வான்வெளியில் ஏவி அதிரவைத்தார்.


எரிபொருளும் உந்துவிசை நுட்பமும்:

ஒரு ஊர்தி விண்ணில் பறக்கத் தேவையான உந்துசக்தியைப் பெற போகர் 'கற்பூரத் தைலத்தை' எரிபொருளாகப் பயன்படுத்தினார். இந்தத் தைலத்தை எரிப்பதன் மூலம் கிடைக்கும் வெப்பக் காற்றானது (Hot Air), ஊர்தியைப் புவியீர்ப்பு விசைக்கு எதிராக மேலே உயர்த்தியது. இது இன்றைய 'Hot Air Balloon' தத்துவத்தை ஒத்திருக்கிறது. அதுமட்டுமின்றி, திசைகளை அறியவும், ஊர்தியை நிலைப்படுத்தவும் 'காந்த விசை' என்ற நவீன நுட்பத்தையும் அவர் தனது சித்திர ரதத்தில் பொருத்தியிருந்தார் என்பது வியக்கத்தக்க உண்மை.

வான் குடை: உலகின் முதல் பாராசூட்
நடுவானில் விபத்து ஏற்பட்டால் அதிலிருந்து ஒரு பொறியாளராகத் தப்பிக்கவும் வழி வைத்திருந்தார் போகர். 'வாயு புகுந்து மனிதனைத் தூக்கும்' என்ற ஏரோடைனமிக்ஸ் விதியை நவீன அறிவியல் கண்டறியும் முன்பே, போகர் அதைச் செயல்படுத்திக் காட்டினார். அவர் உருவாக்கிய ‘வான் குடை’ தான் இன்றைய பாராசூட்டின் ஆதிமூலமாகும். பாதுகாப்புத் தொழில்நுட்பத்தில் தமிழர்களின் அறிவு எவ்வளவு முன்னேறியிருந்தது என்பதற்கு இதுவே மிகச்சிறந்த சான்று.

 வான்வழியே கண்ட புவியியல் உண்மை:
எல்லாவற்றையும் விட உச்சகட்ட வியப்பு இதுதான்... வான்வழியே உலகை வலம் வந்த போகர், இந்தப் பூமி ஒரு 'நீலக்கோள்' என்பதை அன்றே பதிவு செய்தார். செயற்கைக்கோள்கள் இல்லாத காலத்தில், இந்தப் பூமி நான்கு பங்காகப் பிரிக்கப்பட்டால் அதில் மூன்று பங்கு நீரும், ஒரு பங்கு நிலமும் இருப்பதை அவர் துல்லியமாகக் கணக்கிட்டுக் கூறினார். வான்வழியே மிக உயரத்தில் இருந்து பூமியைப் பார்த்த ஒருவரால் மட்டுமே இவ்வளவு துல்லியமான புவியியல் உண்மையை உரக்கச் சொல்ல முடியும். சித்தர் போகர் என்பவர் வெறும் ஆன்மீகவாதி மட்டுமல்ல; அவர் ஒரு தலைசிறந்த ஏரோநாட்டிக்கல் இன்ஜினியர். நமது ஓலைச்சுவடிகளில் மறைந்து கிடக்கும் இதுபோன்ற அறிவியல் உண்மைகளை உலகிற்கு உரக்கச் சொல்வது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.

போகர் சப்தகாண்டம் 
1801 முதல் 1808
4142 முதல் 4147
2390 முதல் 2395
1281 முதல் 1285 உள்ள பாடல்களின் குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது.

சில பாடல்கள் மட்டும் கீழே மேற்கோள் காட்டியுள்ளேன்:👇

"பான்மையாம் வாயுவது மேலாதாரம் பற்றுகையில் காத்தாடி மேலேநோக்கும்
வான்மையுடன் நடுக்கம்பி வட்டந்தன்னில் நயமுடனே சூட்சாதி சூட்சந்தன்னை
மேன்மையுடன் கயிறுமாட்டி சுருக்கும்போது மெல்லெனவே காத்தாடி இறங்கலாகும்
தான்மையுடன் சுக்கானின் சூட்சமப்பா தரணியிலார் அறிவார் விசுவர்தானே." (1804)
பொருள்:
“காற்றினால் மேலே எழும்புவது, கயிறு மூலம் கட்டுப்பாடாகக் கீழே இறங்குவது மற்றும் சுக்கான் கொண்டு திசை திருப்புவது ஆகிய வான்வழிப் பயண நுட்பங்களை இப்பாடல் விளக்குகிறது.”

"போட்டவுடன் கற்பூரத் தயிலமூட்டி பொங்கமுடன் விளக்கொளிதான் வைத்துபாலா
நாட்டமுடன் கும்மட்டம் போல்சோதித்து நயமுடன் காற்றடங்கச் செய்துபின்னும்
மூட்டமுடன் வாயுவது உள்ளேதங்கி முயற்சியுடன் மேலெழும்பிப் போகும்பாரும்
வாட்டமுடன் கூட்டமதுதான் ஆகாஷத்தில் வளமுடன் போவதற்குத் திறமுண்டாச்சே." (2393)
பொருள்: கற்பூரத் தைலத்தை எரிபொருளாகப் பயன்படுத்தி நெருப்பை மூட்டினால், அந்த வெப்பக் காற்று (வாயு) உள்ளே தங்கி, வாகனம் தானாக மேலே எழும்பும்.

"பார்க்கவே வாகனமாய் வான்வெளிதனில் பரிவுடனே
குதிப்பதற்கு கூண்டுசொல்வேன்
கார்க்கவே வட்டமாம் குடைதானொன்று பாங்கான
குடைநிகளம் அகலங்கேளிர்
ஏர்க்கவே ஆறடியாம் வட்டவீடு யெழிலான
பட்டுவடம் தன்னால்செய்து
தீர்க்கவே பிரம்பதுவும் முப்பத்திரண்டு திறமான
சக்கரமும் ஒன்றேமாட்டே." (1281)
பொருள்:
வான் ஊர்தியில் இருந்து கீழே குதிக்க உதவும் 'பாராசூட்' கருவியை பட்டு மற்றும் பிரம்பு கொண்டு எப்படிச் செய்வது என்பதைப் போகர் விளக்குகிறார்.

"மாட்டவே சக்கரத்தில் இரும்புக்கம்பி மார்க்கமாய்த்
தான்முடுக்கி ஆணிமாட்டி
நீட்டமுடன் கம்பிக்குத் துணிதான்போர்த்து நெடிதான
சூத்திரமாம் கயற்தான்கோர்த்து
வாட்டமுடன் தான்விரித்து குடையையேந்த வாகாகத்
தான்குதிக்கில் வாயுபூந்து
தேட்டமுடன் காற்றதுவும் கூண்டேதூக்கும் தீவிரமாய்
மனிதனுந்தான் கீழ்நோக்கலாமே." (1282)
பொருள்:
இன்றைய நவீன பாராசூட் குடை போல விரிந்து காற்றைப் பிடித்து மனிதனை மெதுவாகவும் பாதுகாப்பாகவும் தரையில் இறக்குவது போல, அதே காற்றியல் அறிவியலை இந்தப் பாடலில் போகர் தெளிவாகவும் துல்லியமாகவும் விளக்கியுள்ளார்.

"ஆதாரங்கள் இன்றி நாம் எதையும் எழுதவில்லை! போகர் சப்தகாண்டம் 7000 நூலில் உள்ள அந்த அசல் பாடல்களை நீங்களே நேரில் காண ஒரு பொக்கிஷம் இது. சித்தர்களின் மறைபொருளை நீங்களாகவே வாசித்து உணரும்போது தான் அதன் நிஜமான அறிவியல் புரியும். தமிழனின் வான்வெளி நுட்பங்களை மூலப் பாடல்களுடன் தேடி அறிபவர்களுக்கு இது ஒரு சிறந்த வழிகாட்டி!
👇


கருத்துரையிடுக

0 கருத்துகள்