ஆவிகள் அளித்த "இசை" - Rosemary Brown மர்மம்.


இசை உலகை வியக்க வைத்த ஒரு மர்மமான பெண் – ரோஸ்மேரி ப்ரவுன். 
இறந்துபோன இசை மேதைகள் அவரது மூலம் புதிய இசை தொகுப்புகளை எழுதியதாக கூறப்பட்ட அதிரவைக்கும் மர்ம சம்பவங்கள்...

உலகப்புகழ்பெற்ற இசை மேதைகளான Franz Liszt, Fredrick Chopin, Ludwig Van Beethoven, ஆகியோர் இறந்து பல காலம் ஆகிவிட்டது. இவர்கள் இறந்த பின்பும் தனது இசை பணியை தொடர்ந்தார்கள் என்பதை, ப்ரவுன் என்கின்ற பெண்மணியை பற்றி அறிந்து கொள்ளும்வரை என்னாலேயே நம்ப முடியவில்லை,அதுவும் 1970ம் ஆண்டு மே மாதம் இந்த ஆவியுலக இசைத்தட்டுகள் இங்கிலாந்தில் விற்பனைக்கு வந்தபோது, இந்த உலகமே பிரமித்துப் போனது.

இந்த மாதிரியான மனித அறிவுக்கு அப்பாற்பட்ட புரியாத புதிர்களை, வெளிச்சமிட்டு காட்டுவது மட்டுமே நம்முடைய இந்த தளத்தின் நோக்கம். இதை நம்புவதோ அல்லது நம்ப மறுப்பதோ அவரவர் விருப்பம். இனி வீடியத்திற்குள் செல்வோம்.

1970 களில் இங்கிலாந்தில் வாழ்ந்த Rosemary Brown என்கின்ற பெண்மணி, "இந்த இசைமேதைகளின் ஆன்மாக்கள் தன்னை தொடர்புகொண்டு அவர்களது புதிய இசை படைப்புகளை தந்ததாக கூறி அறிவியல் உலகையே ஆச்சர்யப்படவைத்தார்.  

இந்த பிரவுன் என்கின்ற பெண்மணி அந்த காலகட்டத்தில் BBC தொலைக்காட்சியில், ஆவியுலகில் இருந்து தனக்கு அளிக்கப்பட்ட இசை வடிவங்களை பற்றி விளக்கமளித்தார். அதாவது, இந்த இசை மேதைகளின் ஆன்மாக்கள் தனது கையை பிடித்து இசை அமைப்புகளை எழுதி கொடுத்ததாக கூறுகிறார். ஆவியுலக ஆய்வாளர்கள் இதனை AUTOMATIC WRITING என்கிறார்கள். அதாவது, மீடியம் எனப்படும் ஆவியுலகை தொடர்புகொள்ளும் நபர், பேப்பரில் பேனாவை பிடித்தபடி எழுதும் நிலையில் அமர்ந்திருக்க, சம்பந்தப்பட்ட ஆன்மா, அவரது கையை பிடித்து தனது எண்ணங்களை எழுத்துக்களாக காகிதத்தில் எழுதத் தொடங்கும்.

இப்படி இந்த பெண்மணி மூலம் ஆவியுலக இசை மேதைகள் எழுதி கொடுத்த இசை வடிவங்களை, ஆய்வு செய்த இசை வரலாற்று ஆராய்ச்சியாளரும், பேராசிரியருமான Ian parrot என்பவர், "ஒரு கைதேர்ந்த இசை கலைஞனால் கூட இம்மாதிரி இறந்து போன மேதைகளின் இசை வடிவங்களை காப்பி அடித்து வடிவமைக்க முடியாது என்றார்.

இந்த இசை வடிவங்களின் உண்மை தன்மையை பரிசோதிக்க, ஒரு MULTI VARIATE ANALYSER எனப்படும் ஒரு கணினி பயன்படுத்தப்பட்டது. 1971 மே மாதம், கணித மேதையும் இசை மேதையுமான STAN KELLY இதனை ஆய்வு செய்தார். இந்த இசை மேதைகள் உயிரோடு வாழ்ந்த காலத்தில் உருவாக்கிய இசை வடிவங்களையும், இவர்களின் ஆவிகளின் உதவியோடு இந்த பெண்மணி வடிவமைத்த இசையையும், அந்தக் கணினியில் பதிவு செய்து அவைகளுக்குள் உள்ள ஒற்றுமை, வேற்றுமைகளை விஞ்ஞானிகள் ஆராய்ந்தனர். 80 முதல் 90 சதவீதம் வரை ஒரேமாதிரியாக இருக்கிறது என்பதை கணினி காட்டியபோது, அறிவியல் உலகமே ஆச்சர்யமடைந்தது.


பீத்தோவனின் 10வது சிம்பொனி அவர் இறக்கும் போது முழுமை பெறவில்லை. பீத்தோவனின் சில இசை குறிப்புகள் மட்டுமே இருந்தன. 2019ல் ஜெர்மனி மற்றும் பல்வேறு நாடுகளில் இருந்து இசை மேதைகள், கணினி விஞ்ஞானிகள் , AI நிபுணர்கள் இணைந்து பீத்தோவனின் 10வது சிம்பொனியை உருவாக்க முயன்றனர். இறுதியில் 2021 அக்டோபர் மாதம் இதனை வெளியிட்டார்கள். ஆனால், பீத்தோவனின் இசை தரத்தை AI ஆல் தரமுடியவில்லை என்று பலர் விமர்சனம் செய்தனர்.

AI போன்ற எவ்வித உயர் தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலகட்டத்தில், Rosemary Brown தொகுத்தளித்த இசை எங்கிருந்து வந்தது என்பது புரியாத புதிராகவே இன்று வரை இருக்கிறது.

திருமதி.ரோஸ்மேரி ப்ரவுன் எழுதிய நூல்கள்:
1.Unfinished Symphonies – 1971
2. Immortals at My Elbow – 1974
3. Look Beyond Today – 1986

உண்மையில் பீத்தோவன் போன்ற இறந்து போன இசை கலைஞர்களின் ஆவிகள் தான் இந்த இசை வடிவங்களை இந்த பெண்மணிக்கு வழங்கியதா என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்..

அறிவுக்கு அப்பாற்பட்ட அறிவியலுடன் அடுத்த பதிவில் சந்திப்போம்..!


கருத்துரையிடுக

0 கருத்துகள்